நமக்கு ஒரு பழக்கம் உண்டு.


 நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாமாக உருவாக்கிக்கொண்ட சில அளவுகோல்கள் நம்மிடம் உண்டு.

அந்த அளவீடுகளுக்கு அவர் பொருந்தவில்லை என்றால்.

நம் கற்பனைக் கணிப்பீடுகளுக்குள் அவர் சிக்கிக்கொள்ளவில்லை என்றால்,

அவர்மீது முதலில் தோன்றுவது வெறுப்பு.

அதுதான் அவனுக்கு நிகழ்ந்தது.

ஆர்வக்கோளாறு

over Attitude

பேராசை பிடித்தவன்

over படம்

தோனியாக தன்னை நினைத்துக்கொண்டான்

இன்னும் பற்பல........

இவை நம் அளவுகோல்களில் சில.

வேடிக்கை என்னவென்றால் இவைகள் நம்மிடமும் நமக்கே தெரியாமல் இருப்பதுதான்.

மற்றவரை விமர்சிக்க மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்கின்றவை.

ஒருவேளை அவன் இவைகளாக இருக்கலாம்.

இல்லாமலும் இருக்கலாம்.

அல்லது கொஞ்சம் கொஞ்சமும் இருக்கலாம்.

என்னைக் குறைகளோடு சகித்துக்கொள்ளாமல்,ஏற்றுக்கொள்கிற ஒரு சில மனிதர்கள் இருப்பதால் 

இப்போதெல்லாம்

கர்த்திக் பாண்டியாக்கள் 

எனக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல் மாறாக ரசிக்க வைக்கிறார்கள்.

நமது சிக்கல் மனிதரைக் குறைகளோடு ஏற்றுக்கொள்வதில் இருக்கும் முரண்தான்.

ஒருவேளை அவன் இடத்தில் நாம் இருந்து ஒரு பெரிய அணி நல்லவாய்ப்பு வழங்க அணுகும்போது விமர்சித்த நம்மில் எத்தனைபேர் வாய்ப்பை மறுத்திருப்போம் என்று தெரியாது.

அவன் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான் .

சூழ்நிலைக்கைதியாக ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டான்.

காலம் லேசாகக் கீறிவிட்டாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் என்போன்றவர்கள் இருக்க.

ஒரு பெரிய வாள்கொண்டு அவன் நெஞ்சைப்பிளந்துவிட்டது துயரம்.

நம்பிய துணை வேறு துணைநாடியதாக செய்தி வந்தது.

மரத்தால் விழுந்தவனை மாடு அல்ல டைனோசர் மிதித்த கதை அது.

அதனால் என்ன அவனிடம்தான் பணம் கொட்டிக்கிடக்கிறதே.

இவைகள் பெரிதாக தாக்கியிருக்காது.

சில இரவுகள் மட்டும் அழுதுதுடித்து தலையணை நனைத்திருப்பான்.

பல இரவுகள் கொடிய பாம்புடன் தூக்கம் இன்றித் தவித்திருப்பான்.

அம்மாவின் சல்வார் துண்டத்தில் அழுதுவடித்தபின் வரும் மூக்குச்சளி துடைத்திருப்பான்.

புரியாத பாஷையில் மகனிடம் ஒருவேளை புலம்பித்தள்ளியிருப்பான்.

அவ்வளவுதான்.

அவனிடம்தான் பணமும் புகழும் கொட்டிக்கிடக்கிறதே.

எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு கிண்ணம்தான் நம்ப பசிக்கு இரைன்னு தெரிஞ்சு சிங்கம் மாதிரி பாஞ்சு அதோட குரவளைய பிடிச்சு தூக்கினான் பாரு .

ப்ப்ப்பாபா.....

புகைப்படத்தின் சைகையின் அர்த்தம் இதுதான்.

"வாழ்க்கை என்னிடம் சொன்னது .

பெருசா ஏதாவது வேணுமா? 

அப்போ பெருசாத்தான் பறிப்பன் .

ஊரே பாக்குறமாதிரித்தான் அடிப்பன்.

வலிக்க வலிக்க திரும்பத் திரும்ப அடிப்பன்.

வாங்கிக்கொள் .

பொறுத்துக்கொள்.

மன தைரியத்தோட அமைதியா இரு.

உனக்குரிய மகுடம் வந்துகொண்டிருக்கிறது

நாளையும் அவன்மீது சொல்லால் கல் எறிவார்கள்.

ஏனென்றால் அவன் காய்க்கின்ற மரம்.

வென்றபின் அழுதுகொண்டே அவன் தனியாகச் சுற்றித்திரிந்து யாரையோ தேடிக்கொண்டே இருந்தான்.

இந்த எலும்புக்கூடுகள் தேடுவதெல்லாம் எந்தத் தருணத்திலும் துணையாக நிற்கும் ஒரு

அக்கறையை

அன்பை

ஒரு ஜீவனைத்தானே?

Comments

Popular posts from this blog

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.