இவரு யாரு தெரியுமா ஒரு காலம் இவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படி என்று பற்றி ஞாபகம் இருக்கா. 1980 க்கு முற்பட்ட காலங்களில்
இவரு யாரு தெரியுமா ஒரு காலம் இவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படி என்று பற்றி ஞாபகம் இருக்கா. 1980 க்கு முற்பட்ட காலங்களில்
மிகவும் பேர் போன பெட்ரோல் மெட்ஸ் கீழ் உள்ள டேங்க் இல் இரண்டு கருவிகள் உண்டு ஒன்று காற்றை நிறப்ப மற்றொன்று காற்றை திறந்து மண்ணெண்ணெயை நிபல் மெண்டலுக்கு அனுப்பி வைக்க. மண்ணெண்ணெய் ஊற்றி காற்றை pomp செய்து நிரப்பி மென்டல் என்று சொல்லும் திரியை வட்டமாக இருக்கும் கண்ணாடிக் கூட்டுக்குள் உள்ள சின்ன ஒரு சுடப்பட்ட மண்ணில் சல்லாடை போன்ற ஒரு பாத்திரம் (அதன் பெயர் மறந்து விட்டேன்) அதில் மென்டல் திரியை கட்டி அப்புறமாக கீழே படத்தில் காணப்படும் டேங்க் அதில் காற்றை மெல்லமாக திறக்கும் கருவி மூலமாக நிபல் பின் அதற்கு மண்ணெண்ணெயை பாயச் செய்து மேலே உள்ள அந்த இடைவெளி அதில் தீக்குச்சியை பற்ற வைத்து மெல்லமாக வாயால் ஊதி மெண்டலுக்கு நெருப்பை பரவச் செய்து அதன் பின் மறுபடியும் காற்றடித்து நிபல் பின் அஜ்ஜஸ்ட் செய்து வைத்து பளிச் என்று வரும் வெளிச்சம் அத்தோடு வரும் ஸ்... ஸ்.. எனும் மென்மையான சத்தம் பிரகாசமாக காட்சி தரும். அப்பொழுது மேலே ஒரு இடத்தில் தொங்க விட்டு விடுவார்கள். வெளிச்சம் பரவலாக இருக்கும். இது சுமார் 1980க்கு முற்பட்ட காலங்களில் மின்சாரம் இல்லாத வீடுகளில் உபயோகப் படுத்தி உள்ளார்கள். வீடுகளில் விஷேசம் என்றால் வாடகைக்கு மக்கள் வாங்கி சென்றார்கள். சிலர் வீடுகளில் மரணம் சம்மதிக்கும் போது அல்லது விசேஷம் வரும் போது தம்மிடம் உள்ள இந்த பெட்ரோல் மட்ஸ் ஐ இலவசமாக வழங்கி இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் தலை நிமிர்ந்து அப்படி ஒரு வாழ்க்கை வந்தது இந்த பெட்ரோல் மெட்ஸ் அது ஒரு அழகிய நிலா காலம் மூலமாக உங்களுக்கு கடந்து வந்த பாதையை சின்ன ஒரு சின்ன நினைவூட்டல்..!!
Comments
Post a Comment