மனுசன போட்டு வதைக்காம அப்படியே ஏத்துகிட்டு வாழ பழகுங்க 25 வயசு ஆகுனா எப்ப கல்யாணம்னு கேக்குறீங்க
மனுசன போட்டு வதைக்காம அப்படியே ஏத்துகிட்டு வாழ பழகுங்க
25 வயசு ஆகுனா எப்ப கல்யாணம்னு கேக்குறீங்க
பயலுக தாடிய வளத்த காடையனுங்கனு சொல்றீங்க
தாடி மீசை இல்லாம இருந்தா ஏன் பொம்பளை மாதிரி இருக்கனு கேக்குறீங்க
ஒருத்தன் தனிகட்டயா இருந்தா இப்படியே இருந்து என்னா பண்ண போறனு கேக்குறீங்க
புதுசா கல்யாணம் பண்ணவங்கிட்ட போய் எதும் விஷேசம் இல்லையானு கேக்குறீங்க
லவ் பண்றவன்கிட்ட போய்டு இந்த காதல் எல்லாம் பொய்னுங்குறீங்க
நல்லா படிக்கிறவன் கிட்ட போய்டு இப்பயெல்லாம் படிச்சவனுக்கு எங்க வேலைனு சொல்றீங்க
படிக்காதவன்கிட்ட போய்ட்டு இப்ப எல்லாம் படிச்சா தான் வேலைனு சொல்லறீங்க
மூஞ்சில ஏன் பரு வந்துருக்கு
ஏன் முடி கொட்டுது
ஏன் மெலிவா இருக்க
ஏன் குண்டாருக்க
இவ்வளவு தானா சம்பளம்
இப்படி கேள்வி கேட்டுக் கேட்டு சாகடிக்காதீங்க
அவங்க அவங்க வாழ்க்கைய அவங்க அவங்க வாழ்துப்பாங்க
தயவு செய்து வதைக்காதீங்கடா
Comments
Post a Comment