இளையராஜா தனது 50வது வயதில்
81 வயதை தொடப்போகும் இளையராஜா தனது 50வது வயதில் அதாவது இன்றிலிருந்து சுமார் 30 வருடங்களுக்கு முன், 1993-ம் ஆண்டு, எப்படி வேலை பார்த்திருக்கிறார் என்று கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.
1993 ம் ஆண்டு மொத்தம் 45 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
ஒரு படத்திற்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டால் மொத்தம் 225 பாடல்கள். 2 பாடலுக்கு ஒரு நாள் என்று வைத்துக் கொண்டாலும் 113 நாட்கள் பாடல்களுக்காக மட்டும்.
அத்தனை படங்களுக்கு பின்னணி இசை. ஒரு படத்திற்கு 3 நாட்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட 135 நாட்கள் பின்னணி இசைக்காக மட்டும்.
ஆக மொத்தமாக 248 நாட்கள் தொடர்ச்சியாக வேலை பார்த்தால் மட்டுமே இத்தனை படங்களுக்கு இசையமைப்பது சாத்தியம். நான் எடுத்திருப்பது குறைந்தபட்ச நாட்கள் மட்டுமே.
இது மட்டும் அல்லாமல் படங்களுக்கு கதை கேட்பது, ட்யூன் போடுவது, இயக்குனர் தயாரிப்பாளர், பாடலாசிரியர் இவர்களுடன் டிஸ்கஷன். இசைக் கச்சேரிகள் நடத்துவது. பயணங்கள் செல்வது. இத்தனையும் சேர்த்துப் பார்த்தால் மனிதர் எப்படியெல்லாம் வேலை பார்த்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
1993-ம் ஆண்டு
பொங்கல் படங்கள் - 5
சின்ன மாப்ளே
கோயில் காளை
மாமியார் வீடு
வால்டர் வெற்றிவேல்
தமிழ் புத்தாண்டு படங்கள் - 5
கலைஞன்
உத்தமராசா
பொன்னுமணி
அரண்மனைக் கிளி
உள்ளே வெளியே
தீபாவளி - 3
சின்ன ஜமீன்
எங்க முதலாளி
கிளிப்பேச்சு கேட்கவா..
இவையனைத்தும்.அவர் செய்தது தன்னுடைய 50வது வயதில் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாவை கொண்டாடுவோம்.
Comments
Post a Comment