ஒவ்வொரு மனிதர்களோட வார்த்தைகளுக்கும் உக்காந்து பதில் சொல்லிட்டு இருந்தோம்னா நாம நம்ம பயணத்த தொடர முடியாது..
ஒவ்வொரு மனிதர்களோட வார்த்தைகளுக்கும் உக்காந்து பதில் சொல்லிட்டு இருந்தோம்னா நாம நம்ம பயணத்த தொடர முடியாது..
அதே மாதிரி அவங்க வார்த்தைகளுக்கு பயந்துட்டு இருந்தோம்னோ வாழ்க்கைய வாழ முடியாது..
நாம கொஞ்சம் குண்டா இருந்தோம்னா
நாம நிறைய சாப்பிடுறோம்னு சொல்லுவாங்க..
ஒல்லியா இருந்தோம்னா
அவனுக்கு சாப்பாட்டுக்கே வழி இல்ல..
அப்பிடியும் இல்லனா எவ்வளோ சாப்பிட்டாலும் உடம்பே இல்லனுவாங்க..
நாலு பேருக்கு முன்னுக்கு அழகா Dress பண்ணிட்டு கொஞ்சம் Style-ah போனா சொல்லுவாங்க
Over scene-னு..
நமக்கு Comfortable-ah Normal-ah dress பண்ணிட்டுப்போனா சொல்லுவாங்க
என்னதான் நமக்கிட்ட இல்லனாலும் நாலு பேருக்கு முன்னுக்கு வரக்குள்ள கொஞ்சம் நல்லா Dress பண்ணிட்டு, கொஞ்சம் அழகா தான் வந்து இருக்கலாமேனு..
புடிச்ச மாதிரி ஒரு வாகனத்த வாங்கி
புடிச்ச மாதிரி நாலு இடங்களுக்கு போய் வந்தா சொல்லுவாங்க
சும்மா காச அநியாயமாக்குற வேலனு..
சரினு யாரோடயும் தேவ இல்லாத பேச்சுக்குப்போகாம வீட்டுக்குள்ளையே இருந்தா சொல்லுவாங்க
இவன் ஒரு திமிரு புடிச்சவன்னு..
மனிசங்க இப்பிடி தான்
நாம என்ன பண்ணாலும் அத பத்தி பேச தான் போறாங்க
பண்ணலனாலும் பேச தான் போறாங்க..
இப்பிடி எல்லாரோட வாழ்க்கையையும் உக்காந்து விமர்சிச்சிட்டு இருக்க மனிதர்களுக்காக நாம நம்ம நேரத்த கொடுக்குறது அர்த்தமில்லாத ஒன்னு..
அடுத்தவன் என்ன பண்ணாலும் குறை சொல்றவன்
கடைசி வர குறை மட்டுமே சொல்லி வாழ்ந்துட்டு செத்துருவான்..
நாம நம்ம வாழ்க்கைய அனுபவிச்சி வாழ்ந்துட்டு அப்பறமா சாவோம்..❤️🪄
Comments
Post a Comment