வானவில்லை ஒரு பென்சில் ஓவியமாய் தீட்டிக் காட்ட முயல்வது என் அன்பை
வானவில்லை ஒரு பென்சில்
ஓவியமாய் தீட்டிக் காட்ட முயல்வது என் அன்பை
உனக்கு சொல்ல முயன்று
தோற்பது
பறவையின் நிழல்
பூமியிலிருந்து மெல்ல மறைவது
உன்னில் சிறுகச் சிறுக
கரைந்து வெளிச்சமாவது
ஒவ்வொரு பூவிலும் தன்
தொப்புள் குழியை தேடிக் கொண்டிருந்த வண்டு
ஒரு மாங்கனிக்குள்
தன் கருவறையை கண்டு கொண்டது
நீ எனக்கு உன் மடி ஈந்தாய்
Comments
Post a Comment