வேண்டாமென்பதெல்லாம் 'ஒரு காலத்தில்' வேண்டுமென்றது தான். 


நிராகரிப்பவை எல்லாம் ' ஒரு காலத்தில்' விரும்பியவை தான். 

கொண்டாடுவதெல்லாம் 'ஒரு காலத்தில்' கண்டு கொள்ளாதது தான். 

பிரிவெல்லாம் 'ஒரு காலத்தில்' உயிருக்கு உயிரானது தான். 

துரோகமெல்லாம் 'ஒரு காலத்தில்'

நம்பிக்கை தான். 

துயரமெல்லாம் 'ஒரு காலத்தில்' மகிழ்வு தான். 

வேதனையெல்லாம் 'ஒரு காலத்தில்'

இணக்கம் தான். 

எல்லாமே 

ஒரு காலத்தில்தான்..

ஒரு காலம் வரை தான் எல்லாமே.

அது இன்பமோ துன்பமோ,

மகிழ்வோ துயரோ,

வேண்டுமோ வேண்டாமோ 

எதுவோ.. 

எல்லாமே 

ஒரு காலம் மேல் எதுவும் நீடிக்காது.

உலக சூட்சுமம் அவ்வளவு தான்.

இதை சற்று விளங்கிக்கொண்டாலே போதுமானது.

வாழக்கை 'வலி'க்காது..

Comments

Popular posts from this blog

நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.