Anbe Sivam
என் உலகம் ஒன்றும்
அவ்வளவு பெரிதல்ல
இதோ
என் காலடியில் கிடக்குதே
ஒரு சிறிய பந்தை போல
அவ்வளவு தான்
அதில்
எத்தனை இரவுகள்
எத்தனை பகல்கள்
கோடை வெயில்
மழைக் குளிர்
மார்கழி பனி
இடைக்கிடை
பூகம்பங்களும்
புயல்களும்
அத்தனையும்
இந்த சிறிய
கோளத்தில்....!!!
எல்லாவற்றையும்
ஏற்றுத்தான்
வாழ்கின்றேன்
எதையும்
மாற்ற எண்ணவில்லை
மாறும் என்ற
நம்பிக்கை மாத்திரம்
அடிமனதில் எங்கையோ
வேர் இட்டுள்ளது....!!!
மாறாவிட்டாலும்
நான் வாழ்ந்து முடித்துவிடுவேன்
இதில் என்ன
அவ்வளவு கஷ்டம்....!!
அப்பப்போது வரும்
கண்ணீர்களை மட்டும்
யாருக்கும் தெரியாமல்
தலையனைக்குள்
புதைத்துக் கொள்வேன்
அடுதவர் பரிதாபங்கள்
மாத்திரம்
என் மனதை ஏனோ
அவ்வளவு பாதிக்கும்...!!!!
கடந்ததை உடனுக்குடன்
மறக்கும்
திறமையெல்லாம்
ஏனோ எனக்கு
கிடைக்கப் பெறவில்லை
ஆனால்
காலங்கள் மறதி என்னும்
மருந்தளித்து
என்னை மெருகேற்றுகின்றது....!!!
ஆம்!
நான் நேற்றைக் காட்டிலும்
இன்று
பலத்துடன்தான் இருக்கின்றேன்
நேற்றைய பிரச்சனைகள்
எல்லாம்
இன்று என்னை அதிகளவில்
பாதிப்பதில்லை
அத்துடன்
பிரச்சனைகளை கண்டு
நான் அஞ்சுவதும் இல்லை...!!!
அதற்காக எதற்கும் துணிந்தவன்
என்று என்னை நானே
சொல்லிக் கொள்ளமாட்டேன்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம்
மாத்திரம் எனக்கு
ஏதே கிடைக்கப்பெற்ற வரம்...!!!
இது போதுமே
இந்த சின்ன உலகில்
சிறகடுக்க...!!❤
Comments
Post a Comment