யாரோ எழுதியது............ நான் சிறுவனாக இருக்கும் போது ...

 

யாரோ எழுதியது............

நான் சிறுவனாக இருக்கும் போது ...

ஒரு நாள்  

என் அம்மா  இரவு 

சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் அம்மாவும் 

எங்கள் குடும்பத்தை சமாளிக்க 

வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் 

கருகிய ரொட்டி ஒன்றை 

என் கண் முன் , என் அப்பாவுக்கு 

பரிமாறினார் என் அம்மா ..... 

என் அப்பாவிடம் 

கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு 

வருத்தம் தெரிவித்தார் என் அம்மா...

ஆனால் 

அதற்கு என் அப்பாவோ ..

"எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும்" என்று பதில் சொன்னதை 

என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த 

சற்று நேரத்துக்குப் பின்... 

நான் மெல்ல அப்பாவின் அருகில் சென்று அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :

" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் 

அமைதியாக இருந்த 

என் அப்பா , சொன்னார்....

" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று , நமக்கும் பணி செய்கிறார் .

களைத்தும்  இருப்பார் .

ஒரு 

கருகிய ரொட்டி 

யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... ஆனால் 

கடும் வார்த்தைகள் 

கண்டிப்பாக காயப்படுத்தும்...

நான் ஒன்றும் 

சிறந்த மனிதன் அல்ல ... 

ஆனால் 

அதற்கு முயற்சிக்கிறேன்...

ஆம்..

“ கருகிய ரொட்டி யாரையும் 

காயப்படுத்தப் போவதில்லை ... 

ஆனால் 

கடும் வார்த்தைகள் 

கண்டிப்பாக காயப்படுத்தும்....”

இந்த தத்துவத்தை எண்ணியபடியே  

இரவு சாப்பிட அமர்ந்தபோது ...

பரிமாறப்பட்ட உணவு 

கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...

ஆனால் 

என் உணர்வுகள் 

ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

Comments

Popular posts from this blog

நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.