இப்போதுதான் பிறந்தது போலிருக்கிறது அதற்குள் ஓராண்டு முடிந்து விட்டது
இப்போதுதான் பிறந்தது போலிருக்கிறது
அதற்குள் ஓராண்டு முடிந்து விட்டது
பெரிதாய்
ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து
வாழ்வே தலைகீழாக மாறிவிட வேண்டுமெனும்
நப்பாசையில்தான்
எப்போதும்போல
இவ்வாண்டும் துவங்கியது
அப்படியெல்லாம்
ஆவதற்கு
வெறும் மூன்று மணிநேர சினிமா
இல்லையே
வாழ்வு
வசந்தங்கள் வர
இன்னும் காலமெடுக்கலாம்
அதுவரை
எஞ்சியிருக்கும்
கொஞ்சம் நம்பிக்கைகள்
கொஞ்சம் பிரார்த்தனைகள்
கொஞ்சம் கனவுகளோடு
எப்போதும் போல புன்னகைத்து
முன் செல்லலாம்
பின்னும் கூட
இப்போதுதான் பிறந்தது போலிருக்கிறது
அதற்குள்
ஓர் ஆண்டே முடிந்து விட்டது
Comments
Post a Comment