ஒரு மாலை வேளையில், ஒரு அழகிய மலையின் உச்சியில், குருவும் அவரது சீடனும் அமர்ந்திருந்தனர்.

 ஒரு மாலை வேளையில், ஒரு அழகிய மலையின் உச்சியில், குருவும் அவரது சீடனும் அமர்ந்திருந்தனர். சீடன் வாழ்க்கையின் அர்த்தத்தை தன் குருவிடம் கேட்டு அறிந்துகொள்ள ஆவலுடன் இருந்தான்.

சீடன்: குருவே, வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன?

குரு: வாழ்க்கை ஒரு ஆற்றை போல, அது எப்போதும் ஓடுகிறது, மாறுகிறது, மேலும் புதிய பாதைகளை உருவாக்குகிறது. மனிதர்களாகிய நாமும் வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கான பாதைகளை நல்வழியில் அமைத்துக்கொள்ள வேண்டும். 

சீடன்: ஆனால் குருவே, நாம் எப்படி அந்த ஆற்றின் பாதையை போல் வாழ்கையில் நல்ல பாதையை கண்டறிவது?

குரு: நீ உன் மனதை அமைதியாக்கி, உன் உள்ளத்தின் குரலை கேட்க வேண்டும். அது உன்னை சரியான பாதையில் வழிநடத்தும்.

சீடன்: ஆனால் குருவே, நாம் வாழ்கை பாதையை தேர்ந்தெடுப்பதில் தவறுகளை செய்துவிட்டால் என்ன செய்வது?

குரு: தவறுகள் நம்மை வளர்க்கும் அனுபவ பாடங்கள். அவை நம்மை மேலும் பலமாக்கும், மேலும் ஞானத்தை அளிக்கும். 

சீடன்: குருவே, இன்னும் ஒரு சந்தேகம்! நாம் எப்படி வாழ்கையில் சந்தோஷமாக இருக்க முடியும்?

குரு: சந்தோஷம் ஒரு மனநிலை. நீ உன் மனதை நிம்மதியாக வைத்து, உன் வாழ்க்கையியில் நல்ல விஷயங்களில் சிறிய சிறிய மகிழ்ச்சிகளை கண்டறிந்து அனுபவித்தால், சந்தோஷம் உன்னை தேடி வரும். 

அதற்க்கு இந்த ஆறு வழிமுறைகளை வாழ்கையில் பின்பற்றினாலே போதும். வாழ்கையில் எப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பாய்.

1. மனதை அமைதியாக வைத்திரு.

2. எதற்காகவும் யாரிடம் எதையும் எதிர்பார்க்காதே (பொருள், மரியாதை, பிரதிபலன்...).

3. ஒரு முறை தெரியாமல் ஏதேனும் தவறு செய்துவிட்டால் மீண்டும் அந்த தவறை தெரிந்தே செய்யாதே.

4. பயனற்ற தேவை இல்லாத விவாதங்களை தவிர்த்து விடு .

5. முட்டாள்களிடம் உன்னிடம் உள்ள நியாயத்தை புரியவைக்க முயற்சிக்காதே.

6. உன்னை அவமானபடுத்தும், புறம்பேசும், துரோகம் செய்யும் நபர்களை மன்னித்து அவர்களிடமிருந்து விலகிவிடு.

இந்த உரையாடல் மூலம் சீடன் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தான். அவன் குருவின் வார்த்தைகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, அமைதியான மனதுடன் தன் பயணத்தை தொடர்ந்தான். அவன் தன் வாழ்க்கையில் சந்தோஷமும் ஞானமும் கண்டறிந்தான். இதுவே வாழ்க்கையின் அழகு!

Comments

Popular posts from this blog

நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.