உனக்கென்னப்பா வெளிநாட்டுல இருக்கா,


 உனக்கென்னப்பா வெளிநாட்டுல இருக்கா, ஊர்ல இருக்குறவன பாத்து உனக்கென்னப்பா நல்லா இருக்கா, எங்குறதுட வலி அந்த வாழ்க்கையை வாழ்றவங்கள தவிர வேற யாருக்குமே சொல்லி விளங்கப்படுத்த முடியாது, மெசின் வாழ்க்கைன்னு சாதாரனமா கடந்துட்டு போற அந்த வார்த்தைகளுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்குற வலிகள் ஆயிரம் வெளிநாடுன்னா, வாடகை, வருமான வரி,காப்புறுதி,மாத பொதுப்போக்குவரத்து, நெட், அது இதுன்னு உழைக்குறத்துக்கு சமனா வந்து நிக்கும் செலவுகள், அதுவும் மணித்தியாலத்துக்கு தான் சம்பளம், ஆக்கள் கூடினா கூட நேரம் வேல தரமாட்டானுகள், ஆக்கள குறைய போட்டா மூணு பேர்ட வேலைய ஒராள் செய்யனும், கிடைச்ச சான்ஸ்ல காச பாக்கனும் எங்குற ஒரு மெசினரி தான் மைண்ட்ல ஓடிட்டே இருக்கும், இதுல குளிர் காலம்ன்னா குளிருக்குன்னு 10 உடுப்பு போடனும் அதுட வெயிட்டோட 6 மாசம் வேலை செய்யனும்,வெயில் காலம்ன்னா என்னதான் சூடா இருந்தாலும் shoe போட்டே ஆகனும், 

போட்டோக்கு மட்டும் தான் இங்க எல்லாமே அழகா இருக்கும்,  அப்டி கஸ்டம்ன்னா ஊருக்கு வாறானே எனும் கருத்துக்கள் இருந்தாலும் ஊர்ல கூட நல்லா இருக்குறவங்கள பாத்திங்கன்னா அவங்களும் இதே வாழ்க்கை முறையைத்தான் வாழ்றாங்க, ஒரு நல்ல பொசிசன்ல இருக்குறவங்கட Responsibility and commitment அவங்கள்ட்ட கேட்டாத்தான் தெரியும், Regional manager பெரிய வாகனம், நல்ல ஹோட்டல்ல நிக்கார்ன்னு சொல்லிட்டு போய்டுவம் அவண்ட போய் கேட்டாத்தான் தெரியும், அவனுக்கு மேல வேலை செய்றவன் குடுக்குற பிரசர்,  இதப்போல risk எடுத்து business செய்றவங்கன்னு அவனுகென்ன நல்லா இருக்கன்னு நீங்க நினைக்கிறவனுக்கு பின்னாலையும் “அவன் இழந்துட்டு இருக்குற ஒரு வாழ்க்கை இருக்கு” 

நான்லாம் எவ்வளவோ பேருக்கு நல்லது செஞ்சிருக்கன், இப்ப வரைக்கும் எனக்கு எதுவுமே நல்லதா நடக்கல்லன்னு ஜோசிக்கிறத விட 

இப்போ வரைக்கும் நீ நல்லா இருக்க  என்னல்லாம் செஞ்சிருக்க எங்குறத மட்டும் ஜோசிச்சிக்க புரியுதா! மற்றதெல்லாம் நல்லதாவே நடக்கும். 

No Risk. No Story.

Comments

Popular posts from this blog

நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.