மனசு சரி இல்லை சரக்கடிச்சா கொஞ்சம் relax ஆகும்
மனசு சரி இல்லை சரக்கடிச்சா கொஞ்சம் relax ஆகும்...
ஒரே Tension ah இருக்கு ஒரு தம் அடிச்சா சரி ஆயிடும்....
மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு சரக்கடிறது ஒரு கொண்டாட்ட மனநிலை அதுல இருந்து easy ah வெளில வந்துடலாம் ஆனா கஷ்ட்டத்துல சரக்கடிக்கிறது போதைக்கு அடிமையாகுரதுல முதல் படியா இருக்கும்...
வாழ்க்கையில பிரச்சினை இல்லாத மனிதன் எங்கேயுமே இல்ல குடும்பத்துல நடக்குற பிரச்சினை கடன் பிரச்சினை காதல் பிரச்சினை நண்பர்களுக்குள்ள ஏற்படுர துரோகம் மன அழுத்தம் இதுக்கெல்லாம் ஒரு தற்காலிக தீர்வு சரக்குலயும் தம்லையும் கிடைக்கும்ன்னு மனிதன் நம்புறது ஆகசிறந்த அடிமுட்டாள் மனநிலை....
ஒரு மனிதன் பிரச்சினை ஏற்படும்போது அதற்கான காரணம் என்ன தீர்வு என்னன்னு யோசிக்காம சரக்கு தம் தேடுவது என்பது ஒரு போதைக்கான அடிமை மனநிலை...
பிரச்சினைகளுக்கு தற்காலிக ஆறுதல் நமக்கு நெருக்கமானவர்கள் கூட பேசுறது(நெருக்கமான நண்பன் சரக்கடிக்க கூப்ட்டா அவன விட்டு தள்ளியே இருங்க)பிடிச்ச இடங்களுக்கு போறது சும்மா காலாற சின்னதா கொஞ்ச நேரம் நடக்குறது இன்னும் நிறைய சின்ன சின்ன விஷயங்கள் மனசுக்கு தற்காலிக ஆறுதல் குடுக்கும்...
எரிமலை வந்தால் கூட ஏரி நின்று போர்தொடுப்போம்ன்னு தைரியமான மனநிலையோடு பிரச்சினைகளை எதிர்த்து நிக்கிறதுதான் அந்த பிரச்சினைக்கு எதிரா நாம எடுத்து வைக்குற முதல் அடியா இருக்கும்...
ஆக கஷ்டமான சூழ்நிலையில் ஆறுதலுக்காக சரக்கையோ தம்மையோ தேடி போகாம ஆக வேண்டியதை பாப்போம்....🚶🚶🚶
Comments
Post a Comment