மஞ்சள் மேகமாய் என் மனதை
மஞ்சள் மேகமாய்
என் மனதை
கொள்ளை கொண்டாய்
மரணத்திலும்
மறக்கக்கூடதென
நினைக்கும் நொடிகள்
அவையெல்லாம்!
இருந்தும்
மறந்தே ஆகவேண்டும்
என்று
வானை பார்காது
தரை பார்த்து நடந்தேன்
சில காலம்...!
விதி யாரை விட்டது
மீண்டும்
என் வானில்
அதே மேகம்
இம்முறை
இன்னும் நெருக்கமாய்
ஓர் ஓடம் போல்
என்னை ஏற்றிச் சென்று
வானவில் எல்லாம்
சுற்றிக் காட்டியது
வாழ்வை வாழ்ந்த கணங்கள்
அவை எல்லாம்...!!!
விதிக் காற்றில்
என் மேகமும்
என்னை தரையிறக்கிக்
கலைந்து சென்றது
அதுவும் பாவம்
என்ன செய்ய
காலங்களின் கணக்கை
யார் அறிவார்...!!
முழுவதும் நீயென
வாழ்ந்தவன்
இன்று உன்
முகவரி கூட
தெரியாது
தவிக்கின்றேன்
உருகும்
கண்ணீர்களை
கவிகள்
கொண்டு துடைக்கிறான்...!!!
மகிழ்ந்து வாழ்வதாய்
என்னை நானே
ஏமாற்றி
வாழ்கின்றேன்
இன்னும் எத்தனை
காலங்கள்...!!!
மறக்க எத்தனிக்கும்
தருணங்கள்
எல்லாம்
மேலும் மேலும்
மூழ்குவதால்
அதனை தீண்டாமலே
வாழ்ந்து கொண்டுள்ளேன்...!!
மறுமுறையும் வேண்டாம்
இந்த மனவடுக்களே
இன்னும்
ரணங்களாய்
என்னை தைக்குதடி
இப்படியே
நான் இருந்து விட்டு
போகின்றேன்
இன்னும் ஓர்
மரண வேதனை
என் மனம் தாங்காதம்மா!
என்னதான் இருந்தாலும்
என் வாழ்வின்
மிகவும்
மகிழ்ந்த கணங்கள்
யாவும்
உன்னுடனான
நினைவுகள் மட்டும் தான்
அது போதும்
இந்த ஜென்மம் முழுவதும்
அடுத்தமுறையேனும்
உனக்கு
பிடித்தபடி பிறப்பெடுப்பேன்
அப்போது
என் மேகம் என்னை
மழை கொண்டு
கட்டிக் கொள்ளும்....!!!!
Comments
Post a Comment