Posts

Showing posts from July, 2024

நமக்கு ஒரு பழக்கம் உண்டு.

Image
 நமக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாமாக உருவாக்கிக்கொண்ட சில அளவுகோல்கள் நம்மிடம் உண்டு. அந்த அளவீடுகளுக்கு அவர் பொருந்தவில்லை என்றால். நம் கற்பனைக் கணிப்பீடுகளுக்குள் அவர் சிக்கிக்கொள்ளவில்லை என்றால், அவர்மீது முதலில் தோன்றுவது வெறுப்பு. அதுதான் அவனுக்கு நிகழ்ந்தது. ஆர்வக்கோளாறு over Attitude பேராசை பிடித்தவன் over படம் தோனியாக தன்னை நினைத்துக்கொண்டான் இன்னும் பற்பல........ இவை நம் அளவுகோல்களில் சில. வேடிக்கை என்னவென்றால் இவைகள் நம்மிடமும் நமக்கே தெரியாமல் இருப்பதுதான். மற்றவரை விமர்சிக்க மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்கின்றவை. ஒருவேளை அவன் இவைகளாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அல்லது கொஞ்சம் கொஞ்சமும் இருக்கலாம். என்னைக் குறைகளோடு சகித்துக்கொள்ளாமல்,ஏற்றுக்கொள்கிற ஒரு சில மனிதர்கள் இருப்பதால்  இப்போதெல்லாம் கர்த்திக் பாண்டியாக்கள்  எனக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல் மாறாக ரசிக்க வைக்கிறார்கள். நமது சிக்கல் மனிதரைக் குறைகளோடு ஏற்றுக்கொள்வதில் இருக்கும் முரண்தான். ஒருவேளை அவன் இடத்தில் நாம் இருந்து ஒரு பெரிய அணி நல்லவாய்ப்பு வழங்க அணுகும்...

புரிந்ததாய்

Image
  புரிந்ததாய் எண்ணித்தான் கடக்கின்றேன் புதிய பக்கத்திற்கு அதன் முதல் வரி முடிக்க முன்போ முன்னைய பக்கத்தில் பல முரண்பாடுகள் புதிது புதிதாய் பல கேள்விகள்...!!! எதிர்வரும் பக்கங்களின் எண்ணிக்கையும் படித்து முடித்திட வேண்டும் என்ற கட்டாயமும் எப்போதும் ஒரு பக்கமாய் அழுத்தியே அழைத்துச் செல்கின்றன...!!! போக போக கேள்விகள் அதிகரித்து செல்கின்றன சில பதில்கள் வாழ்வின் போக்கில் கிடைக்கப் பெற்றாலும் சில கேள்விகள் மாத்திரம் பதிலற்று தொக்கி நிற்கின்றன...!!! பாதிக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் அதை என் மனமே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது....!!! மீதிக் கேள்விகளின் பதில் கிடைக்கப் பெறும் வேளை கேள்விகளே வேறாய் மாறிப்போய் நிற்கின்றது....!! சிலவேளை இதெல்லாம் புரிந்து நீ என்ன கிழிக்கப் போகின்றாய் என்றெல்லாம் என் மனமே என்னை கேலி செய்கின்றது...!!!! இருப்பினும் அடுத்தப் பக்கங்களில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் ஆச்சரியங்களும் மகிழ்ச்சிகளும் தொடர்ந்து செல்லச் செய்கின்றது....!!! இந்த உலகில் எந்த கேள்விக்களுக்கும் எப்போதும் அச்சாய் பொருந்தும் பதில்கள் இல்லை....!!! நாமே அவற்றை பொருத்திக் கொண்டால் தான் உண்டு...!!!!...

மஞ்சள் மேகமாய் என் மனதை

Image
மஞ்சள் மேகமாய் என் மனதை கொள்ளை கொண்டாய் மரணத்திலும் மறக்கக்கூடதென நினைக்கும் நொடிகள் அவையெல்லாம்! இருந்தும் மறந்தே ஆகவேண்டும் என்று வானை பார்காது தரை பார்த்து நடந்தேன் சில காலம்...! விதி யாரை விட்டது மீண்டும் என் வானில் அதே மேகம் இம்முறை இன்னும் நெருக்கமாய் ஓர் ஓடம் போல் என்னை ஏற்றிச் சென்று வானவில் எல்லாம் சுற்றிக் காட்டியது வாழ்வை வாழ்ந்த கணங்கள் அவை எல்லாம்...!!! விதிக் காற்றில் என் மேகமும் என்னை தரையிறக்கிக் கலைந்து சென்றது அதுவும் பாவம் என்ன செய்ய காலங்களின் கணக்கை யார் அறிவார்...!! முழுவதும் நீயென வாழ்ந்தவன் இன்று உன் முகவரி கூட தெரியாது தவிக்கின்றேன் உருகும் கண்ணீர்களை கவிகள் கொண்டு துடைக்கிறான்...!!! மகிழ்ந்து வாழ்வதாய் என்னை நானே ஏமாற்றி வாழ்கின்றேன் இன்னும் எத்தனை காலங்கள்...!!! மறக்க எத்தனிக்கும் தருணங்கள் எல்லாம் மேலும் மேலும் மூழ்குவதால் அதனை தீண்டாமலே வாழ்ந்து கொண்டுள்ளேன்...!! மறுமுறையும் வேண்டாம் இந்த மனவடுக்களே இன்னும் ரணங்களாய் என்னை தைக்குதடி இப்படியே நான் இருந்து விட்டு போகின்றேன் இன்னும் ஓர் மரண வேதனை என் மனம் தாங்காதம்மா! என்னதான் இருந்தாலும் என் வாழ்வின் மிகவும் ...