எப்பவுமே ஓவர் மெச்சூர்டா இருக்கனும்ன்னு யோசிக்காத..ஒரு நாள, ஒரு நேரத்த உனக்குன்னு மட்டும் எடுத்துக்க, உனக்குப் பிடிச்சத செய், யார் என்ன நினைப்பாங்க ஏது நினைப்பாங்கன்னல்லாம் மைண்ட் பண்ணாத, விருப்பமானத சாப்பிடு, சமைக்கத் தோணினா சமை, டான்ஸ் ஆடப்போறியா ஆடு, விளையாடப்போறியா போய் விளையாடு,நீ சின்ன வயசுல எதுல பைத்தியமா இருந்தியோ அத திரும்ப செஞ்சு ஞாபகப்படுத்திக்க, வேலைக்கு போய்ட்டம், கல்யானம் முடிச்சிட்டம், பிள்ளை இருக்கு, வயசாகிடுச்சின்னு காலம் போக போக உன்ன அறியாமலையே உனக்கு ஒரு ப்ரசர் வந்துட்டே இருக்கும், சுற்றி இருக்குறவங்க மாறிட்டே இருப்பாங்க, உன்ன நோக்கின தேவைகள் கூடும், இந்தக் காலம் உன்ன ஒரு கட்டத்துக்கு மேல நிம்மதியா இருக்கவே விடாது, எப்பவுமே responsible person ah இருந்தியன்னு வை அந்த மெண்டல் ப்ரசரே உன்ன நீ வெறுக்குறத்துக்கு ஆளாக்கிரும்! ஒரு நாளாவது எல்லாத்தையும் மறந்து உன்ன நீயே சந்தோசமா வச்சிக்கனும் , self love தான் இங்க எல்லாமே! நாம வாழ்ற வாழ்க்கையே temporary இதுல..வர்ற பிரச்சினைக்கு Permanent Solution தேடறது முட்டாள்தனம் புரியுதா!